Wednesday, September 25, 2024

ஆங்கிலம் வேற்றுமையில் ஒற்றுமை

யார் எழுதியது என்று 
தெரியவில்லை. 
ஆனால் உண்மை.

1. ADULT ஐந்துஎழுத்துக்கள்
     அதே போல YOUTH

2. PERMANENT ஒன்பது எழுத்துக்கள்
     அதே போல TEMPORARY.

3. GOOD நான்கு எழுத்துக்கள்
     அதே போல EVIL.

4. BLACK ஐந்து எழுத்துக்கள்.
     அதே போல WHITE.

6. LIFE நான்கு எழுத்துக்கள்
    அதே போல DEAD.

7. HATE நான்கு எழுத்துக்கள்
    அதே போல LOVE.
 
9. ENEMIES ஏழு எழுத்துக்கள்
    அதே போல FRIENDS.

10. LYING ஐந்து எழுத்துக்கள்.
       அதே போல் TRUTH.

11. HURT நான்கு எழுத்துக்கள்
       அதே போல் HEAL.

12. NEGATIVE எட்டு எழுத்துக்கள்
       அதே போல POSITIVE.

13. FAILURE ஏழு எழுத்துக்கள்
      அதே போல SUCCESS.

14. BELOW ஐந்து எழுத்துக்கள்.
       அதே போல ABOVE.

15. CRY மூன்று எழுத்துக்கள்
       அதே போல JOY.

16. ANGER ஐந்து எழுத்துக்கள்
      அதே போல HAPPY.

17. RIGHT ஐந்து எழுத்துக்கள்
      அதே போல WRONG
     
18. RICH நான்கு எழுத்துக்கள்
       அதே போல POOR.

19. FAIL நான்கு எழுத்துக்கள்
      அதே போலPASS.

20. KNOWLEDGE ஒன்பது எழுத்துக்கள்
       அதேபோல IGNORANCE

வியப்பாக இருக்கிறது
இந்த ஒற்றுமை.

இதிலிருந்து அறியப்படும் நீதி 
என்ன என்றால்,

LIFE is like a double edged sword but the choice we make determines our future.

படித்ததில் மனதைக் கவர்ந்தது.

Saturday, September 21, 2024

உங்கள் வீட்டில் என்ன சாப்பாடு?

தமிழ் மொழியில் *சோறு* என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருப்பது தெரியாமல்... தமிழர்களோ, White Rice, Fried Rice, Biriyani Kuska, Egg Rice என ஆங்கிலத்தில் பல்வேறு பெயர் வைத்து அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
 
நம் உணவுக்கு சோறு என்பது அந்த 27 பெயர்களில் ஒன்று என்று சூடாமணி நிகண்டு சொல்லுகிறது.
 
இனி பெயர்கள் அகர வரிசையில்:
 
1. அசனம்,
2. அடிசில்,
3. அமலை,
4. அயினி,
5. அன்னம்,
6. உண்டி,
7. உணா,
8. ஊண்,
9. ஓதனம்,
10. கூழ்,
11, சரு,
12. சொன்றி,
13. சோறு
14. துற்று,
15. பதம்,
16. பாத்து,
17. பாளிதம்,
18. புகா,
19. புழுக்கல்,
20. புன்கம்,
21. பொம்மல்,
22. போனகம்,
23. மடை,
24. மிசை,
25. மிதவை,
26. மூரல்,
27. வல்சி

உங்கள் வீட்டில் என்ன சாப்பாடு?

Thursday, September 19, 2024

நிதானம் பிரதானம்

கார் ஓட்டிக்கொண்டு போகிறீர்கள்...

தேசிய நெடுஞ்சாலையில்...!

நிதானமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் போது...

பின்னால் ஹார்ன் சத்தம் கேட்கிறது!

ரியர் வியு கண்ணாடி வழியாகப் பார்க்கிறீர்கள்.

ஒரு விலையுயர்ந்த காரில்...

இளைஞர் ஒருவர் உங்களை முந்த முயற்சிப்பது தெரிகிறது!

அது உங்களுக்குப் பிடிக்கவில்லை!

வேகத்தை 70ல் இருந்து 80க்கு உயர்த்துகிறீர்கள்.

அவரும் உயர்த்தியிருப்பார் போல...!

இப்போது இரண்டு வண்டிகளும் ஒன்றுக்கொன்று இணையாக ...!

சளைத்தவரா நீங்கள்...?

வேகத்தை 100க்கு ஏற்றுகிறீர்கள்.

அவரும் நமட்டுச் சிரிப்புடன் 110க்கு ஏற்றி முன்னேற முயற்சிக்கிறார்.

நீங்கள் ஐந்தாவது கியருக்கு வேகமாக மாறி... 120ஐத் தொடுகிறீர்கள்.

இப்படியே போனால்.....

முடிவு என்னவாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

இந்நிலையில்....

உங்களுக்கு ஒரு இமாலயக் கேள்வி?!!

இப்போது.....

உங்கள் காரை ஓட்டிக் கொண்டிருப்பது நீங்களா... அல்லது அந்த இளைஞரா...?!

நிதானமாக 70 கி.மீ. வேகத்தில் இயற்கையை ரசித்தபடி...

பாதுகாப்பாகக் கார் ஓட்டிக் கொண்டிருந்த நீங்கள்...

இப்போதோ...

ஆபத்தான முறையில் 120 கி.மீ. வேகத்தில்...

கடும் கோபத்துடன் ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்!

காரணம்.... வேறு யாரோ.. எவரோ..?

வாழ்க்கையையும் சிலர் இப்படித்தான் கடத்துகிறார்கள்!

தனக்கு எது தேவை... எது வேண்டும்... தனக்கு எது முக்கியம் என்பதைப் பற்றிய உணர்வின்றி...

அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமையில் ஏதேதோ செய்து...

தங்கள் இலக்கைக் கோட்டை விடுவதோடு...

பேராபத்தையும் தங்களுக்கு வருவித்துக் கொள்கிறார்கள்!

உங்கள் வாழ்க்கை எனும் வாகனத்தை பிறர் ஓட்டுமாறு செய்து விட வேண்டாம்!

நாமே ஓட்ட வேண்டும்!

வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம்!

அதில் நமது கட்டுப்பாட்டில் நமது வாகனத்தை...

நிதானமாக நாமே இயக்கிச் செல்லும்போது...

நம் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை... எல்லையை...

எளிதாக... பாதுகாப்பாக.... சென்றடைய நிச்சயம் நம்மால் முடியும்!
👍👍👍