Thursday, October 24, 2024

90s கிட்ஸ் சோதனைகள்

90s கிட்ஸ் சோதனைகள்....

டேட்டா எண்டரி பண்ற வேலை, மொதல் மாசம் 1000 ரூபா கட்டி டேட்டா வாங்கிட்டா போதும், அப்பறம் லட்ச லட்சமா கொட்டும்....

MLM,.ஆம்வே ஃபர்ஸ்ட் நீங்க சேரனும், உங்களுக்கு கீழ 5 பேர சேர்க்கனும், அவங்க அப்படியே சேத்திகிட்டு வந்தா 6 மாசத்துல நீங்க கோடீஸ்வரன்....

அனுபவ் பிளான்டேஷன், நீங்க பணம் குடுத்தா தேக்கு மரமா வரவு வைப்போம், அதுல கொட்டும் பாருங்க கோடிகள்....

சீட்டு கம்பெனிகள், நீங்க டெபாசிட் பண்ற பணத்துக்கு 40% வட்டி தருவோம், நீங்க சேர்த்து விடற ஒவ்வொருவருக்கும் உங்களுக்கு கமிசன் உண்டு, வட்டி வாங்கியே சில பல கோடிகள் பார்க்கலாம்....

குலுக்கல்ல உங்களுக்கு பரிசு விழுந்து இருக்கு, வந்து வாங்கிட்டு போங்கன்னு, குடும்பத்தோட கூப்பிட்டு உக்கார வச்சு, எங்க ரிசார்ட் கிளப்ல சேர வருஷம் 2 லட்சம் மட்டும்தான், சேந்தா வருசத்துல 5 நாள் ஃப்ரீயா தங்கலாம்ன்னு உருட்டுன உருட்டுல...

ஈமு கோழி, 10,000 பணம் கட்டிணா உடனே ஒரு ஈமு கோழி குடுப்போம், நீங்க வளத்தி எங்க கிட்டயே குடுத்தா கிலோ 1000 ரூபாய்க்கு வாங்கிக்குவோம், முட்டை ஒவ்வொண்ணும் 500 ரூபா... சீக்கிரம் கோடீஸ்வரன் ஆக, ஈமு கோழிப்பண்ணை.

ஹெர்பா லைஃப், இது வெறும் 2000 ரூபாதான், வாங்கி குடிச்சா ஒரு மாசத்துல 200 கிலோ குறையும், நீங்க யாரையாவது கூட்டிட்டு வந்து சேர்த்து விட்டா உங்களுக்கு டிஸ்கவுன்ட்....

டப்பர்வேர் வித்த குரூப், ஆம்வே பேஸ்ட் வித்த குரூப், ஓரிபிளேம் பொருள் வித்தவன், கோல்ட் குவிஸ்ட்ல தங்கம் வாங்கின குரூப், சஹாரால இடம் வாங்கினவன், சீட்டு போட்டவன், கலைமகள் சபால இடம் வாங்க காசு குடுத்தவன், டேபிள் மேட் வித்தவன்னு எத்தனை பேர், எத்தனை கண்ணிவெடி, எத்தனை ப்ராடுக....

இத்தனை பேரையும் தாண்டி வந்தவனுகதான் 90s கிட்ஸ், என்னமோ ஒரு V3 Ads க்கே இப்படி ஆடி போய் உக்காந்து இருக்கீங்க?

போங்க தம்பி, இது எல்லாம் எங்க வீர வாழ்க்கை முன்னாடி ஒண்ணுமே இல்லை...

Follow:- Suganraj L

#90s #90skids #90snostalgia #90sthrowback  #middleclass

Thursday, October 17, 2024

மழை அளவு கண்டறிய உதவின முற்கால கருவி

ஆட்டுக்கல் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல.. அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர். அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை “பதினு” மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு தயாராவார்கள்.

மழைக்குப் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

“தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.

“சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.

“மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.

” பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும்.

” அடைமழை” – ஐப்பசியில் பெய்வது

” கனமழை” – கார்த்திகையில் பெய்வது..

இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது:

மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.

அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.

4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.

மழையைப் பற்றித் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "மாறாநீர்" என குறிப்பிட்டிருக்கிறார். இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக்கு அணி.

(குறள் 701)

இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார்

 நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.

(குறள் 452)

எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.

ஒரு உழவு மழை :

‘பொதுவாக ஊர்ப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீஅளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என சொல்வது உண்டு.பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.’

நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்....

பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர்.

அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..

இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்...

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...

Sunday, October 13, 2024

வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே

வாய்ப்பு விலகும் போது கவலைபடாதே!
ஒரு ஐடி நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தார்.

ஒரு சின்ன இண்டர்வியூ:
என்னப்பா, தினமும் ஒழுங்கா வேலைக்கு வருவியா? முன் அனுபவம் இருக்கா?

அதெல்லாம் கரெக்டா வந்துடுவேன் சார். முன் அனுபவம் ஏதும் இல்லை. ஆனால் நல்லா வேலை பார்ப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கு சார்.

கடைசியில் அவரிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

'ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே' என்றார் துடைக்க வந்தவர்.

'கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? அட ச்சே!' என்று அவரை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

கையில் 1000 ரூபாய் இருந்தது.

அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான்.

பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான். 1000 ரூபாய் லாபம் கிடைத்தது.

மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டான்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பது சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார்.

அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, 'ஈமெயில் முகவரி இல்லை' என்று பதிலளிக்க,
'ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா?

உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்...? என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

'அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்' என்றார்!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே.

எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகப்பெரும் வெற்றி உங்களுக்காக காத்திருக்கும்.