2026 தேர்தல் ஜெப குறிப்புகள்:
0 ஆட்சி என்றால் என்ன?
வாசியுங்கள், சிந்தியுங்கள்!
1. அரசு ஒப்பந்தங்களை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கொடுப்பதே 0 ஆட்சி
2. நீர் நிலைகளை பராமரிக்காமல், புதிய அணைகளை கட்டாமல் அலட்சியமாய் இருப்பதே 0 ஆட்சி
3. திட்டங்களை அறிவித்தும், அடிக்கல் நாட்டியும், திறப்பு விழா நடத்தியும் செயல்படுத்தாமல் இருப்பதே 0 ஆட்சி
4. மனசாட்சி இல்லாமல் கொள்ளையடித்து கோடிகளை சேர்ப்பதே 0 ஆட்சி
5. அரசுத்துறைகளில் பணி நியமனத்துக்கும், பணி மாறுதலுக்கும் லஞ்சம் வாங்குவதே 0 ஆட்சி
6. சுமார் 8 லட்சம் கோடி கடன்களை குறைக்க நடவடிக்கைகள் எடுக்காமல் வட்டி கட்டுவதே 0 ஆட்சி
7. காற்று மாசைக்கட்டுப்படுத்த, வெப்பமயமாக்குதலை தடுக்காமல் அலட்சியமாய் இருப்பதே 0 ஆட்சி
8. மதவாதிகளுக்கும், ஜாதி வெறியர்களுக்கும் ஆதரவு கொடுத்து அவர்களை வளர்ப்பதே 0 ஆட்சி
9. பகுத்தறிவை வளர்க்காமல், மூடநம்பிக்கைகளுக்கு துணை நிற்பதே 0 ஆட்சி
10. சிறுபான்மை மக்கள் ஓட்டு வேண்டும், அவர்கள் நலம் வேண்டாம் என வெறுப்பதே 0 ஆட்சி
11. ஓட்டுக்களை வசப்படுத்த கவர்ச்சி திட்டங்களை அறிவிப்பதும், ஆட்சிக்கு வந்த பின் அவைகளை மறுப்பதுமே 0 ஆட்சி
12. குடும்பங்களை சிதைக்கும், விதைவைகளை உருவாக்கும் மதுவை ஒழிக்காமல் இருப்பதே 0 ஆட்சி
13. காவல்துறையை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்த துறையாக அல்ல அடாவடி துறையாக மாற்றுவது 0 ஆட்சி
14. திரு ஜெயராஜ், பெனிக்ஸ் போன்றோரை கொடூரமாகக் கொன்ற கொலையாளிகள் வழக்கை முடிக்காமல் எழுத்தடிப்பதே 0 ஆட்சி
15. போதை பழக்கங்களை அனுமதித்து, கண்டும் காணாமல் இளைஞர்கள் எதிர்காலத்தை அழிப்பதே 0 ஆட்சி
16. கொள்கை எதிரிகளை முழு மனதோடு எதிர்க்காமல், மறைமுகமாக ஆதரவு கொடுப்பதே 0 ஆட்சி
17. வளர்ச்சித் திட்டங்களை எல்லா மக்களுக்கும் செயல்படுத்தாமல் வஞ்சனை காட்டுவதே 0 ஆட்சி
18. கொள்ளையடிப்பது தெரிந்தும், தங்கள் கட்சியினரை கண்டும் காணாமல் வளர்த்து விடுவதே 0 ஆட்சி
19. குண்டும், குழியுமான சாலைகளை பராமரியாமல் இருப்பதும், தரமான சாலைகளை அமைக்காமல் இருப்பதுமே 0 ஆட்சி
20. 20% முதல் 40% க்கும் மேல் எல்லா துறைகளிலும் லஞ்சம் வாங்குவதே 0 ஆட்சி
21. மீடியாக்களை இருட்டடிப்பு செய்து, விமர்சனங்களை வரவேற்காமல் மிரட்டுவதே 0 ஆட்சி
22. விவசாயிகள் நலனில் அதிக அக்கறை செலுத்தாமல் அவர்களை கடனாளி ஆக்குவதே 0 ஆட்சி
23. ஒரு முதலமைச்சர் அல்ல எல்லாரும் முதலமைச்சராக சுய இஷ்டத்துக்கு செயல்படுவதே 0 ஆட்சி
24. எல்லாத் துறைகளிலும் மதவாத சித்தாந்தம் கொண்டவர்களை பணியமர்த்துவதே 0 ஆட்சி
25. கமிஷன் கிடைக்கும் என்பதற்காகவே புதிய அவசியமற்ற திட்டங்களை கொண்டு வருவதே 0 ஆட்சி
அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள். (தீத்து 1:16 )
#tnelection #election #tamil #tamilnadu #news #dmk #tamilnaduelections #tamilnaduelection #electioncommissionofindia #tamilnaducoronaupdate #tamilcoronanews #tamillivenews #tamilbreakingnews #newsnow #tamiltrending #newslive #chennainews #indiacoronanews #indianews #tamilnews #tamilbreaking #tamilnewslive #corona #online #newbuddies #tnelections #bjp #judge #memphis #aiadmk