18-வது (2024) பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெபிப்போம்.
ஆட்சியாளர்களைக் குறித்து பரிசுத்த வேதாகமத்தில்...
சங்கீதம் 102:17
பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.
நீதிமொழிகள் 16:12-13
[12] அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
[13] நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
நீதிமொழிகள் 20:28
தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்.
நீதிமொழிகள் 25:3
வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.
நீதிமொழிகள் 28:15
ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.
நீதிமொழிகள் 29:4
[4] நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான்.
[14] ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.
தேர்தலுக்காக...
தினமும் அதிகாலையில் ஜெபிக்கலாம்
தினமும் இரவில் ஜெபிக்கலாம்
வாரத்திற்கு ஒருதரம் உபவாசிக்கலாம்
ஞாயிறு ஆராதனையில் 10 நிமிடம் ஜெபிக்கலாம்
வாரம் ஒருமுறை இரவில் கூடி ஜெபிக்கலாம்
மாதம் ஒருமுறை இரவில் கூடி ஜெபிக்கலாம்
வாரம் ஒருமுறை ஒரு ஜாமம் ஜெபிக்கலாம்
தினமும் ஒரு தொகுதிக்காக ஜெபிக்கலாம்
தினமும் ஒரு மாநில தொகுதிக்காக ஜெபிக்கலாம்
விசுவாசிகளுக்கு ஒரு தொகுதியின் பெயரைக் கொடுத்து ஜெபிக்க வைக்கலாம்
முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் விசேஷித்த கவனம் செலுத்தி ஜெபிக்கலாம்
தாலுகா வாரியாக ஜெப கூடுகைகளை ஒழுங்குப்படுத்தி ஜெபிக்கலாம்
ஜெபவீரர்களுக்கு தேர்தல் ஜெபக் குறிப்புகளை கொடுத்து ஜெபிக்க வைக்கலாம்
தேர்தல் ஜெப நாள் என அறிவித்து விசேஷமாக சபைகளில் ஜெபிக்கலாம்
ஊழியர் ஐக்கியங்களில் ஜெபிக்க விசேஷமாக ஜெபத் திட்டங்களை ஏற்படுத்தலாம்
24 மணி நேர சங்கிலி ஜெபங்களை நடத்தலாம்
72 மணி நேர துதி ஆராதனை ஜெபத்தை நடத்தலாம்
சிறுவர் ஜெப குழுக்களை ஏற்படுத்தலாம்
வாலிபர் ஜெப குழுக்களை ஏற்படுத்தலாம்
பெண்கள் ஜெப குழுக்களை ஏற்படுத்தலாம்
உபவாசித்து ஜெபிக்கும் குழுக்களை எழுப்பலாம்
God loves you
#election #vote #politics #news #elections #democrat #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics #mayor #mayorelection #political #dailynews #insta #result #india