மனிதர்களின் எண்ணம்
ஆதிமுதலாய் மனிதனின் எண்ணங்கள் கேடுள்ளதாய் உள்ளது
என்பதை வேதவசனம் அறிவிக்கிறது.மனிதனிலுள்ள வஞ்சனை எண்ணம் அவனை நித்தியஜீவனை பெற்று கொள்ள தடையாயிருக்கிறது.
“மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,”
ஆதியாகமம் 6:5
“எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?”
எரேமியா 17:9
“எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.”
மத்தேயு 15:19
மனிதனின் இருதயம் தங்களை ஞானவான் என்றும்,தான் சுத்தமுள்ளவன் என்றும், அவன் வழிகள் செம்மையானவை என்றும் நினைக்கவைத்து வஞ்சிக்கிறது.
“நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.”
நீதிமொழிகள் 3:7
“மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.”
நீதிமொழிகள் 21:2
“மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.”
நீதிமொழிகள் 16:2
“தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு.”
நீதிமொழிகள் 30:12
இப்படிபட்ட வஞ்சிக்கிற இருதயமுடைய மனிதன் தன்னை காத்துகொள்ள தேவனுடைய வழிகளிலும்,கிறிஸ்துவின் உபதேசங்களிலும்,ஆலோசனைகளிலும் தங்களை ஒப்புகொடுத்து நடக்க வேண்டும் .நமக்கு முன் வருகிற அனைத்து காரியங்களையும் தேவனிடம் ஒப்படைத்து தேவன் அனுமதித்தால் செயல்படுவதே நமக்கு நல்லது.வஞ்சிக்கிற இருதயமுடைய மனிதனால் தனக்கு நன்மை தரும் காரியங்களை தேர்ந்தெடுக்க முடியாது.ஆகவே தேவன் மேலுள்ள விசுவாசத்தையுடைய நாம் தேவனுடைய வழிகளில் நடக்கும் போதே ஜெயம் பெறமுடியும்.தேவவார்த்தையின்படி நமது வாழ்க்கையை சீர்ப்படுத்தி வாழவில்லையெனில்
பொல்லாத சிந்தையினால் சிக்கி
கொள்வோம்.
“கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய். உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”
நீதிமொழிகள் 3:3-6
“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.”
சங்கீதம் 139:23-24
“கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே. உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன். உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். கிமெல்.”“என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.”
சங்கீதம் 119:1-2, 9, 15-16 ,25
“என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”
ஏசாயா 55:8-11
No comments:
Post a Comment