என்னைக்காச்சும் யோசிச்சு இருக்கீங்களா ஏன் சில ஹோட்டல்களில் மட்டும் தேங்காய் சட்னி மிக நன்றாக இருக்கிறது என்று நம்ம வீட்ல செய்யும்போது மட்டும் மண்ணு மாதிரி இருக்கு அந்த சுவை வரவில்லை என்று அதற்கு தா தேடி பிடிச்சு இந்த பதிவு
🌟 மொத விஷயம் #அரைமுடிதேங்காய்
பத்தை போடாமல் (சில்லு) துருவி எடுக்கவும் குறிப்பு அந்த அடி பாகத்தில் இருக்கும் தோலை விட்டு விட வேண்டும் இல்லையென்றால் சட்னி கலர் மாறி விடும்
🌟 கால் கப் அளவு #பொட்டுகடலை அதனோடு சேர்க்கவும்
🌟 எல்லோரும் #பூண்டு அதிகமா சேர்ப்பார்கள் ஆனால் இதன் ரகசியமே பூண்டு கம்மியாகவும் #இஞ்சி அதிகமாகவும் சேர்க்க வேண்டும்
🌟இரண்டு பள் பூண்டுக்கு நான்கு துண்டு இஞ்சி என எடுத்து கொள்ளுங்கள்
🌟 ஒரு 5 #சின்னவெங்காயம் (குறிப்பு சின்ன வெங்காயம் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் அப்பொழுதுதான் ஹோட்டல் சுவை வரும் )அதோடு இரண்டு #பச்சைமிளகாயும் #தேவைக்குஉப்பு சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து (இதுவும் முக்கியம்) நைசாக அரைத்து இறுதியில் ஒரு பிடி கொத்தமல்லி சேர்த்து ஒரே ஒரு சுற்று சுற்றி மிக்சியை நிறுத்தவும்
🌟பின்பு வானிலியில் சிறிது #எண்ணெய் ஊற்றி #கடுகு பொரிந்ததும் #உளுந்துஜீரகம் 2 #காய்ந்தமிளகாயை கிள்ளி போட்டு சிவந்ததும் #கருவேப்பிலை கொத்தை அதன் தலையில்போட்டு அடுப்பை அணைத்து அரைத்து வைத்திருக்கும் சட்னியில் எண்ணெய் தாளிப்பை கொட்டவும் அவ்ளோ தா ஹோட்டல்சட்னி ரெடி
🌟 இதில் மிக முக்கியமான விஷயம் தேங்காய் இலசாகவும் இல்லாமல் நன்றாக முத்தினதாகவும் இல்லாமல்
(🌟கண்டிப்பாக #முத்தினதேங்காய் கூடாது கூடவே கூடாது )
ஒரு மத்திம நிலையில் உள்ள உதாரணத்திற்கு தேங்காய் வெள்ளையாகவும் இல்லாமல் கருத்து போயிருக்கும் அப்படியும் இல்லாமல் இரண்டுக்கு நடுவில் ஒரு கலர் இருக்கும் அதை எடுக்க வேண்டும் அது #மிகமுக்கியம்
🌟அடுத்து இஞ்சியும் சின்ன வெங்காயமும் அவசியம்
சிலர் இது எதுவுமே சேர்க்காமல் தேங்காய் கம்மியாக பொட்டுக்கடலை அதிகமாக அதன் தலையில் இரண்டு பச்சைமிளகாயும் உப்பும் மட்டும் சேர்த்து அதுவும் முதலிலேயே தண்ணீர் முழுவதையும் சேர்த்து அரைத்து தாளிதம் செய்வார்கள் அது தான் அதோட குறைக்கு காரணம் ..
🌟என்ன #suganraj ஒரு சட்னிக்கு இவ்வளவு பில்டப் தேவையா என்றால் தேவை தான் அத்தநூண்டு ⚓ ஆங்கர் தான் கப்பலையே நிறுத்துது
🌟நாலு இட்லி சேர்ந்து உள்ள போகனும்னா சட்னி அவசியம்
🌟"சின்ன சின்ன விஷயங்கள் தான் எப்பொழுதும் ஒரு விஷயத்தை மிக அழகாக்கும் அது மாதிரி சின்ன சின்ன விஷயம் தான் இந்த #வெள்ளைசட்னி, #தேங்காய்சட்னி #கெட்டிசட்னி #பொட்டுகடலைசட்னி என் பலவிதங்களில் அழைக்கப்படும் சட்னியின் சுவையை கூட்டும் அதில் சந்தேகம் இல்லை
🌟 இந்த டிப்ஸை பயன்படுத்தி உங்க வீடு சட்னி எப்படி வந்தது என்று கமென்டில் சொல்லவும்
🐯. Thanks to FB friend (சுட்டது)
No comments:
Post a Comment