Monday, January 13, 2025

தை பிறந்தால்.. வழி பிறக்கும்..

இனிய "அறுவடை திருவிழா" நல்வாழ்த்துக்கள்!

அறுவடை முடிந்து அந்த நெல்லில் அரிசி எடுத்து சூரிய பகவான் உதயமாகும் முன் பொங்கல் வைத்து சாமிக்கும் படைக்கும் பொங்கல் திருநாள் தமிழக மக்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று. அந்த வகையில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜன.14ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படும். போகி பண்டிகை தொடங்கி திருவள்ளுவர் தினம் வரை என நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த நாளில் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியன், கால்நடைகளை படைத்த கடவுளுக்கு நன்றி தெரிவிப்போம்.

அன்பும் பண்பும் பெருகிட வறுமை நீங்கி செல்வம் பொங்க அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

அறியாமை அகன்று அறிவு பொங்க பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தமிழர்கள் மதம், சாதி வேறுபாடு கடந்து ஒற்றுமையாக கொண்டாடும் பண்டிகை பொங்கல். 4 நாட்கள் தமிழ்நாடே மிகப்பெரிய கொண்டாட்டமாக, திருவிழா போல மாறும் பண்டிகை ஆகும் இது. விவசாய பண்டிகை என்பதை தாண்டி.. இது தமிழ்நாட்டின் பல கலாச்சார மக்களும் கொண்டாடும் பண்டிகை ஆகும்.

இந்த பண்டிகை நாட்களில், வெளியூரில் இருப்பவர்கள் தொடங்கி பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வரை என அனைவருக்கும் வாட்ஸ் ஆப்பில் மெசஜ்களாகவும், ஸ்டேட்டஸ் வைத்தும், முகநூலில் வாழ்த்து செய்திகளை அனுப்பி மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடும் இந்த நிலையில், நீங்கள் உங்கள் நெருக்கமானவர்களுக்கு பகிரக்கூடிய வாழ்த்து செய்திகளையும், வண்ணமயமான வாழ்த்து அட்டைகளையும்  அனுப்பி மகிழ்வோம்!

அறுவடையைக் கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கையும் புதிய தொடக்கங்களையும் உங்கள் வாழ்வில் கொண்டுவர இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

பொங்கல் என்ற சொல் நேரடியாக பயன்படுத்தப்பட்டாலும், பண்டைய காலங்களில் இது 'அறுவடை திருவிழா' என்றும் அழைக்கப்பட்டது. சோழர் கால கல்வெட்டுகளில் 'புதியீடு விழா', 'மகர சங்கரமணப் பெரும் பொங்கல்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிற மொழி பேசுபவர்கள் இதை 'மகர சங்கராந்தி' என்றும் அழைக்கின்றனர். இது அக்கால அரசர்களின் ஆட்சிப் பகுதிகள் பரந்து விரிந்திருந்ததால், அந்தந்த பகுதி மக்களின் சொல் வழக்கிற்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கலாம் என குடவாயில் பாலசுப்ரமணியன் கூறுகிறார்.

முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் பொங்கல் பற்றிய வரலாற்று ஆதாரம் கிடைக்கிறது. திருவொற்றியூர் கல்வெட்டில் இது 'புதியீடு விழா' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழன் கால கல்வெட்டில் 'மகர சங்கரமணப் பெரும் பொங்கல்' என்ற குறிப்பு உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தைப்பொங்கல் தினத்தில் ராஜேந்திரசோழன் காவிரியில் புனித நீராடியதற்கான கல்வெட்டு ஆதாரமும் உள்ளது.

புறநானூற்றுப் பாடலிலும், பரிபாடலிலும் பொங்கல் விழா குறிப்பிடப்படுகிறது. ஐங்குறுநூறு, சீவகசிந்தாமணி போன்ற இலக்கியங்களிலும் பொங்கல் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவை பொங்கல் விழா தமிழர்களின் பழமையான பாரம்பரிய விழா என்பதை உறுதிப்படுத்துகின்றன.

பொங்கல் விழா, தமிழர்களின் உழவுத் தொழிலுடன் இணைந்த, இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு தனித்துவமான விழாவாகும். இதன் வரலாறு மிகவும் பழமையானது. பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் இலக்கியங்கள் மூலம் இதனை நாம் அறிய முடிகிறது. குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வுகள், பொங்கல் விழாவின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை நமக்கு தெளிவாக விளக்குகின்றன. வாழ்வின் அனைத்து சந்தோஷங்களையும் உங்கள் குடும்பத்துடன் பகிர்ந்து கொண்ட பொங்கல் வாழ்த்துக்கள்..

பொங்கல் பானை பொங்கி வழிவது போல, உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சியும் செல்வமும் பொங்கி வழிய என இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

உங்கள் வீட்டில் புன்னகை பொங்க..இனம் புரியா இன்பம் மனதில் பொங்க...நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க..பொங்கட்டும் தைப் பொங்கல்

தை பிறந்தால்.. வழி பிறக்கும்..

உபாகமம் 7:13
உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.

என்ற வேத வசனத்தின் படி தெய்வத்தின் அருளும் ஆண்டவரின் ஆசியும் உங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கட்டும். பொங்கல் நல்வாழ்த்துகள்!

God loves you Suganraj L 

#Godlovesyou #pongal #makarsankranti #festival #pongalcelebration #sankranti #lohri #india #tamil #happypongal #tamilnadu #instagram #chennai #photography #trending #bhfyp #love #pongalfestival #pongalopongal #uttarayan #happy #indianfestival #pongalwishes #celebration #instagood #kitefestival #tamilmemes #happymakarsankranti #southindianfood #kites

No comments:

Post a Comment