Wednesday, January 15, 2025

ஆண்டவனை காணும் பொங்கல்

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, அடுத்து தைப்பொங்கல், பின்பு மாட்டு பொங்கல், நான்காம் நாள் கொண்டாடப்படுவது கன்னி பொங்கல் என்று சொல்லக்கூடிய காணும் பொங்கல் ஆகும்.

சாதி, சமய வேறுபாடின்றி தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். இப்பண்டிகையில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரின் ஆசி பெறுதல் என்பன அடங்கும். அதாவது வீட்டில் இருக்கும் வயதுக்கு மூத்தவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்று கொள்வார்கள். தங்கள் அன்பையும் உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஆயிரக்கணக்கான பேரை ஒரே இடத்தில் காண்பதற்காக கொண்டாடப்படுவது எனலாம்.

பொங்கல் பானை வைக்கும் போது அதில் புது மஞ்சள் கொத்தினைக் கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள். காணும் பொங்கல் என்றால் குடும்பத்தினருடன் வீட்டில் சமைத்த உணவை எடுக்துக்கொண்டு பிடித்த இடத்திற்கு செல்வது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் பொங்கல் அன்று செய்த சாதத்தை உடன் பிறந்தவர்களின் நன்மைக்காக காக்க, குருவிக்கு அன்னமிட வேண்டும் என்பதே கதை. ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டை மாடியிலோ மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து ஐந்து வகையான சாதங்களை வைக்க வேண்டும்.

“காக்கப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம், கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம், கூடப்பிறந்த சகோதரர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்” என்று சொல்லி படையல் வைக்க வேண்டும்.

உடன்பிறந்தவர்கள் உள்ளுரில் இருந்தால் அழைத்து விருந்து கொடுத்து அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன் பிறந்தவர்களையும் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள், அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்று கூடி காணப்படும் இந்நேரத்தில், 

2 கொரிந்தியர் 9:10
விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.

என்ற வேத வசனத்தின் படி நமது ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் இரக்கமும் கிருபையும் நம்மை ஆசீர்வதித்து உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் நன்மைகள் பெருக வாக்குரைத்த தேவன் அதை நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார். விசுவாசத்தோடு அதைப் பெற்றுக் கொள்ள நம்மை நாமே தகுதி படுத்திக் கொண்டு இயேசுவின் மூலம் பிதாவை வேண்டி ஜெபித்து அற்புதங்களை காணுங்கள். இது தான் காணும் பொங்கல். ஆம், உண்மையில் கடவுளைக் காண்பதே காணும் பொங்கலை சிறந்த முறையில் கொண்டாடுவதாகும். 

செல்வ வளம், ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவை பெருக வேண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து வேண்டி இந்த நாளை கொண்டாடினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வ வளம் நிறைந்ததாக, மங்களகரமானதாக இருக்கும் என்பது நம்பிக்கை.

#காணும்பொங்கல் #KaanumPongal #Godlovesyou God loves you Suganraj L

No comments:

Post a Comment