Wednesday, January 31, 2024

Pray for election 2024

18-வது (2024) பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெபிப்போம்.

ஏன் ஜெபிக்க வேண்டும்?

‭‭‭‭மத்தேயு‬ ‭7:7‭-‬8‬ ‭
[7] கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; 
[8] ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் சொல்கிறார்...

‭‭1 தீமோத்தேயு‬ ‭2:1‭-‬3‬ ‭
[1] நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும். 
[2] நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். 
[3] நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

இந்திய பாராளுமன்றம் மக்களவை மாநிலங்களவை என இரண்டு அவைகளை கொண்டுள்ளது. 58 அமைச்சர்களும் 93 க்கும் மேற்பட்ட துறைகளும் உள்ள நிர்வாகங்களை உள்ளடக்கியது இந்திய தேசம். 

இந்திய நாட்டின் சட்டங்களையும் திட்டங்களையும் உருவாக்கி மக்களை சரியான பாதையில் நடத்தி செல்வதற்கான சிறந்த அமைப்பாக பாராளுமன்றம் இருக்கிறது.

பாராளும் பரமனிடம் பாராளுமன்ற தேர்தலுக்காக பரிந்துபேசி ஜெபிப்போம்!

‭‭தானியேல்‬ ‭5:21‬ ‭
உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார்.

God loves you 

#election #vote #politics #news #elections #democrat #democrats #republican #indian #electionday #democracy #president #voting #republicans #electioncommission #election #elections #electioncommissionofindia #news #narendramodi #electionresults #electionday #politics #mayor #mayorelection #political #dailynews #insta #result #india

No comments:

Post a Comment